போர் நிறுத்தத்திற்குப் பிறகும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரும் தாக்குதல்கள்
ஐக்கிய அரபு அமீரகம் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பிராந்திய பதற்றம் இன்னும் குறையவில்லை என்று கூறப்படுகிறது.
போர் ஆரம்பமானபோது, அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேலிய நலன்களை இலக்குவைப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது. ஆனால் தாக்குதல்களின் பெரும் பாதிப்பை ஐக்கிய அரபு அமீரகமே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம், Fujairah Port மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சுமத்தியது.
இந்த தாக்குதல்களில் மூன்று இந்தியர்கள் காயமடைந்ததாகவும், ஃபுஜைரா பெட்ரோலிய தொழிற்பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஈரானின் நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகம் கடுமையாக கண்டித்துள்ளது. தேவையானால் இராணுவ ரீதியிலும் பதிலடி கொடுக்க உரிமை இருப்பதாகவும் அந்த நாடு எச்சரித்துள்ளது.





