ஐரோப்பா செய்தி

சர்வதேச கடல் பகுதியில் அத்துமீறல்: இஸ்ரேல் படைகள் குறித்து பிரான்ஸ் விசாரணை!

  • May 29, 2026
  • 0 Comments

காசாவுக்கு உதவிப் பொருட்களைக் ஏற்றிச்சென்ற மனிதாபிமானக் கப்பலில் இருந்த பிரான்ஸ் பிரஜைகள், இஸ்ரேலியப் படைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டனர் எனக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பிரான்ஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது. சர்வதேச கடல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட தன்னார்வ செயற்பாட்டாளர்கள், பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டனர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் துருக்கியிலுள்ள பிரான்ஸ் தூதரக அதிகாரி உறுதிப்படுத்தியதை அடுத்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் […]

இந்தியா செய்தி

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய மாலுமிகள் விடுவிப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

ஈரானில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 10 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்பவுள்ளனர். ஈரானின் ஜாஸ்க் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்.வி.ஹார்பர் பீனிக்ஸ் என்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை தடுத்து நிறுத்தியது. அதில் இருந்த இந்திய மாலுமிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகள் காரணமாக இந்திய மாலுமிகள் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன், 2026 மே 28ஆம் திகதியிடப்பட்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொதுப் பாதுகாப்பு, மக்களின் அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதற்கும், அதேவேளை ஒட்டுமொத்த பொதுமக்களின் அன்றாட ஜீவனோபாயத்துக்கு அத்தியாவசியமாக விளங்கும் விநியோகங்கள் மற்றும் சேவைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் ஏதுவாகவே இந்த நடவடிக்கை […]

உலகம் செய்தி

‘அமைதி முயற்சி’ – பாகிஸ்தான், மலேசியாவுக்கு ஈரான் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

போர் சூழ்நிலைக்கு மத்தியிலும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அண்டை நாடுகளுடனான இராஜதந்திர உறவை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகின்றார். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர மலேசியா மற்றும் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை நிலைநாட்ட ஈரான் உறுதியாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அனைத்து துறைகளிலும் முஸ்லீம் நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே ஈரானின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையாக உள்ளது. தனது சமூக […]

ஐரோப்பா செய்தி

கட்சி நிதியை சுருட்டிய கணவர்; துரோகத்தில் வீழ்ந்த முன்னாள் முதல்வர் Nicola Sturgeon!

  • May 29, 2026
  • 0 Comments

” ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) நிதியிலிருந்து பல லட்சம் பவுண்டுகளை கையாடல் செய்த தனது முன்னாள் கணவர் பீட்டர் முரெல் (Peter Murrell) தன்னை “ஏமாற்றி, துரோகம் இழைத்துவிட்டார். ” – என்று ஸ்காட்லாந்தின் முன்னாள் முதல்வர் நிகோலா ஸ்டர்ஜன் (Nicola Sturgeon) மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். பீட்டர் முரெல் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அயர்லாந்தில் நடைபெற்ற Listowel Writers’ Week நிகழ்வில் தனது சுயசரிதையை விளம்பரப்படுத்த Nicola Sturgeon கலந்துகொண்டார். அப்போது […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம்: அமெரிக்க துணை ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

  • May 29, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான விவகாரத்தில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தைகள் சாதகமான திசையில் நகர்வதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி JD Vance தெரிவித்துள்ளார். ஈரானிய அரசு இந்த விவகாரத்தில் நேர்மையுடன் செயல்படுவதாகவும், தற்போதுள்ள சிக்கல்கள் வெறும் சொற்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் மட்டுமே என்றும் JD Vance குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இராணுவ பலமே ஈரானை இந்த இணக்கமான […]

அரசியல் இலங்கை செய்தி

” தேர்தலை பிற்போட அரசு முற்படவில்லை” – அமைச்சர் விளக்கம்!

  • May 29, 2026
  • 0 Comments

“மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட வேண்டிய எவ்வித நோக்கமும் அரசுக்குக் கிடையாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டவுடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.” – அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகளினால் எழுப்பப்பட்டு வரும் சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்கள் வாயிலாகப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:- “மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தப்போது […]

இந்தியா செய்தி

அமுலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கிய 8 பேர் கைது!

  • May 29, 2026
  • 0 Comments

கேரளாவில் அமுலாக்கத் துறை அதிகாரிகள் பயணித்த வாகனம்மீது தாக்குதல் நடத்தினர் எனக் கூறப்படும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 300 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்புடைய 10 இடங்களில் அமுலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதனால் கொதிப்படைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ,அமுலாக்கத் துறை அதிகாரிகள் வந்த வாகனங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

“ஏனைய கட்சிகளை உடைக்கும் எண்ணம் இல்லை” – நாமல்

  • May 29, 2026
  • 0 Comments

” ஏனைய கட்சிகளை உடைத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை வலுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.” என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, மொட்டு கட்சியுடன் இணைத்து, எதிர்க்கட்சி தலைவர் ஆகும் திட்டம் உள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ” ஒரு கட்சியை உடைத்து, எமது கட்சியை வலுப்படுத்துவதற்குரிய திட்டம் இல்லை. அவ்வாறு செயற்பட்டதால் […]

ஐரோப்பா செய்தி

ஆப்கானிஸ்தானில் கொடூரம்: பிரித்தானிய சிறப்பு படையின் மறுபக்கம் அம்பலம்!

  • May 29, 2026
  • 0 Comments

2010 – 2013 காலப்பகுதியில்ஆப்கானிஸ்தானில் , பிரித்தானிய சிறப்புப் படையினரால் (SAS) பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம், அப்போதைய ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயை கடும் அதிருப்தியடையச் செய்திருந்ததாக லண்டனில் நடைபெற்று வரும் பொது விசாரணையொன்றில் தெரியவந்துள்ளது. தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வந்த நேட்டோ (NATO) தளபதிகளிடம், இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி கர்சாய் மிகவும் கடுமையான முறையில் தனது முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய சிறப்புப் படையினர் மேற்கொண்ட […]