உலகம் செய்தி

‘அமைதி முயற்சி’ – பாகிஸ்தான், மலேசியாவுக்கு ஈரான் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

போர் சூழ்நிலைக்கு மத்தியிலும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அண்டை நாடுகளுடனான இராஜதந்திர உறவை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகின்றார்.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர மலேசியா மற்றும் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை நிலைநாட்ட ஈரான் உறுதியாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் முஸ்லீம் நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே ஈரானின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையாக உள்ளது.

தனது சமூக வலைதளப் பதிவின் மூலம், உலக நாடுகளுடன் இணக்கமான உறவைப் பேணுவதற்கான ஈரானின் விருப்பத்தை அந்நாட்டு ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி