ஐரோப்பா செய்தி

சர்வதேச கடல் பகுதியில் அத்துமீறல்: இஸ்ரேல் படைகள் குறித்து பிரான்ஸ் விசாரணை!

காசாவுக்கு உதவிப் பொருட்களைக் ஏற்றிச்சென்ற மனிதாபிமானக் கப்பலில் இருந்த பிரான்ஸ் பிரஜைகள், இஸ்ரேலியப் படைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டனர் எனக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பிரான்ஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சர்வதேச கடல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட தன்னார்வ செயற்பாட்டாளர்கள், பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டனர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் துருக்கியிலுள்ள பிரான்ஸ் தூதரக அதிகாரி உறுதிப்படுத்தியதை அடுத்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, இஸ்ரேலிய ராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்கள் குற்றவியல் ரீதியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்துகிறது.

இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதி வழங்கப்பட வேண்டும் என பிரான்ஸ் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி