அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு!

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன், 2026 மே 28ஆம் திகதியிடப்பட்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுப் பாதுகாப்பு, மக்களின் அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதற்கும், அதேவேளை ஒட்டுமொத்த பொதுமக்களின் அன்றாட ஜீவனோபாயத்துக்கு அத்தியாவசியமாக விளங்கும் விநியோகங்கள் மற்றும் சேவைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் ஏதுவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட டிட்வா சூறாவளி பேரிடரைத் தொடர்ந்து, பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச் சட்டம் ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வருகிறது.

இதற்குரிய அங்கீகாரம் அடுத்த கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது வழங்கப்படவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!