நைஜீரியாவில் மதுபானம் அருந்திய 48 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் மதுபானம் அருந்திய 48பேர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மதுபானத்தை உட்கொண்ட பலருக்கு சிலமணி நேரங்களிலேயே மூச்சுத்திணறல், வயிற்று வலி, கண் பார்வை மங்குதல் வாந்தி மற்றும் மயக்கம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலை ஏற்பட்டவுடன் 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த மாகாண சுகாதாரத்துறை ஆணையர் பன்ஜி அஜாகா கூறுகையில், “இந்த விஷசாராயத்தைக் குடித்தவர்களின் சிறுநீரகம், மூளை மற்றும் கண்கள் மிக வேகமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு நேர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 182 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக நைஜீரிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி, 15 பேரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




