துருக்கியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ விமானம் விபத்து
துருக்கியின் வடமேற்கு மாகாணமான யலோவாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. பயிற்சி பறப்பில் ஈடுபட்டிருந்த F-16 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின்போது விமானி வெளியே குதித்தமையால் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.




