மூச்சுத்திணறல் – மஸ்கெலியாவில் 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மஸ்கெலியாவில் தேசிய பாடசாலையொன்றைச் சேர்ந்த 36 மாணவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இந்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.45 மணியளவில் பாடசாலையின் தொடக்கப் பிரிவைச் சேர்ந்த 96 மாணவர்கள் காலை உணவு அருந்திய பின்னர் தங்கள் வகுப்பறைகளில் இருந்தபோது இந்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில், 30 பேர் சிகிச்சை பெற்று ஏற்கனவே வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள ஆறு மாணவர்கள் மருத்துவமனையில் உள்நோயாளிகளாகத் தொடர்ந்து சிகிச்சை […]



