iOS 16 ஐபோன்களில் பாதுகாப்பு குறைப்பாடு – ஹேக் செய்யப்பட்டதாக தகவல்
ஆப்பிள் கைபேசிகளைப் பயன்படுத்தும் மக்களின் வாட்ஸ்அப் கணக்குகளைக் கைப்பற்றுவதற்கான ஒரு புதிய தாக்குதல் குறித்து இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் வெளிப்படுத்தியுள்ளது. ஜீரோ-கிளிக் என அறியப்படும் இந்த நடவடிக்கை, iOS 16 ஐபோன்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைக் குறிவைப்பதாக அந்த மன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலர் ஏற்கனவே இது குறித்துப் முறைப்பாடு அளித்துள்ளனர். அதன்படி, நாட்டில் ஜீரோ-கிளிக் வாட்ஸ்அப் பாதுகாப்பு மீறல் நடைபெற்று வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனம் […]




