முதலாளிகளின் முகவர்களே எதிரணிகள்: ஆளுங்கட்சி எம்.பி. விளாசல்!
மலையக மக்களுக்கு நிச்சயம் காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும். அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெறும் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “உலக தொழிலாளர் தினத்தை எதிரணிகள் மறந்துள்ளன. ஏனெனில் உலக முதலாளிகளின் முகவர்களாகவே அவை செயல்பட்டுவருகின்றன. மலையக மக்களுக்குரிய உரிமைகள் கடந்தகாலங்களில் மறுக்கப்பட்டன. […]













