கருத்து & பகுப்பாய்வு

பூமியின் நீர் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றம் – நீர் இருப்பு குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டு

பூமியின் நீர் சுழற்சி மிகவும் சீரற்றதாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘எல் நினோ’ (El Niño) நிகழ்வு இந்த நீண்டகாலப் போக்கை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மூன்று தசாப்தங்களில் உலக ஆறுகளின் நீர்மட்டம் மிகக் குறைவாக இருந்த ஆண்டுகளில் 2025-ம் ஆண்டும் ஒன்று என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) தெரிவித்துள்ளது.

2025-ல், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பனிப்பாறைகள் சுருங்கியுள்ளன; அதேவேளையில், உலகின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிந்து வருவதாக WMO வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், WMO-வின் ‘உலகளாவிய நீர் வளங்களின் நிலை’ (State of Global Water Resources) குறித்த வருடாந்திர அறிக்கை, பூமியின் நன்னீர் சேமிப்பு,  அதாவது நிலத்தடி நீர், ஏரிகள், ஆறுகள், மண் ஈரப்பதம், தாவரங்கள் மற்றும் பனி ஆகியவற்றில் சேமிக்கப்பட்டுள்ள மொத்த நீர் கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து வருவதைக் காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை