ஐரோப்பா

ஸ்பெயினில் மற்றுமொரு நபருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு!

  • May 26, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் இரண்டாவது ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பி.சி.ஆர் பரிசோதனையின்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த நபர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தமையால் ஏனையோருக்கு பரவுவதற்கான வாய்ப்பு குறைவாக காணப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையே ஹண்டா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின்பேரில் 12 பேர்  தலைநகர் மெட்ரிட்டில் (Madrid) தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

ஐரோப்பா

ஹன்டா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 22 பிரித்தானியர் நாடு திரும்ப ஏற்பாடு!

  • May 9, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸ் பரவலுக்கு மத்தியில் எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் உள்ள 22 பிரித்தானியர் நாளைய தினம் மீளவும் இங்கிலாந்திற்கு திரும்பவுள்ளனர். கப்பலில் இருந்து இறங்கியவுடன் அவர்கள் முறையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டப்பின் விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் மருத்துவ நிபுணர்கள் பணியில் இருப்பார்கள் என்றும், நோய்வாய்ப்பட்டவர்கள் இருப்பினும் உடனடி சிகிச்சை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு வந்தவுடன், அந்த நபர்கள் 45 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அதற்கான குறிப்பிட்ட விவரங்கள் […]

ஐரோப்பா

ஹண்டாவைரஸ் பாதிப்பு : கப்பலை நங்கூரமிட ஸ்பெயின் மறுப்பு!

  • May 6, 2026
  • 0 Comments

‘ஹண்டாவைரஸ்’ என்ற ஆபத்தான எலி காய்ச்சல் பரவலால் பாதிக்கப்பட்டு கடலில் தவித்து வந்த நெதர்லாந்தின் ‘எம்.வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலை கேனரி தீவில் நங்கூரமிட ஸ்பெயின் மறுப்பு தெரிவத்துள்ளது. பிராந்தியத் தலைவர் பெர்னாண்டோ கிளாவிஜோ (Fernando Clavijo ) பிரதமர் பெட்ரோ சான்செஸுடன் (edro Sanchez) இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேற்படி வைரஸ் தொற்றால் பிரெஞ்சு தம்பதியர் உட்பட ஜேர்மன் நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தம்பதியினர் கப்பலில் ஏறுவதற்கு […]