உலகளாவி ரீதியில் முடங்கியது மைக்ரோசாஃப்ட் -140,000 முறைப்பாடுகள் பதிவு
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகளாவிய ரீதியில் முடங்கியுள்ளது. இதனால் Teams, Outlook மற்றும் மைக்ரோசாஃப்ட்டின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Copilot உள்ளிட்ட சேவைகள், “இணைப்புச் சிக்கல்களால்” (connectivity problems) பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. Downdetector எனும் கண்காணிப்பு இணையதளத்தின்படி, நேற்று மாலை 6.00 மணியில் இருந்து உலகளவில் Outlook தொடர்பான சிக்கல்கள் உச்சத்தை எட்டியுள்ளதாகவும், சுமார் 140,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த முடக்கத்திற்கு சைபர் […]



