அஜர்பைஜானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் பிரஜை விடுதலை
உளவுப் பார்த்த குற்றச்சாட்டின் கீழ் அஜர்பைஜானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு பிரஜை விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று பாரிஸ் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு ரஷ்ய பெரும் பணக்காரர்கள் மீதான தடைகளை நீக்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, அஜர்பைஜான் அரசாங்கம் குறித்த பிரெஞ்சு பிரஜையை விடுதலை செய்தது. தேசியப் பாதுகாப்பு குறித்த கவலைகளைக் காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட , ரஷ்ய உலோகத் தொழிலதிபராள அலிஷெர் உஸ்மானோ மீதான தடைகளை நீக்க பிரான்ஸ் […]





