இத்தாலி அரசின் அதிரடி நடவடிக்கை – மெட்டா நிறுவனத்திற்கு 887 மில்லியன் டொலர் அபராதம்
மெட்டா நிறுவனத்திற்கு இத்தாலியின் தரவுப் பாதுகாப்பு ஆணையம் 887 மில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது. ஃபேஸ்புக்கின் ஒரு அம்சம் மூலம் சுமார் 20 மில்லியன் ஆண்ட்ராய்டு பயனர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் முறையான அனுமதியின்றி அணுகப்பட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சமூக ஊடக வலைதளத்திற்கு எதிராக இத்தாலிய தரவுப் பாதுகாப்பு ஆணையம் விதித்த மிகப்பெரிய அபராதம் இது என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக […]



