ஈஸ்டர் தாக்குதல் – 24 பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையின் முக்கிய தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக 24 பிரதிவாதிகள் இன்று காலை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.




