முரசு புயல் எதிரொலி – இந்தியாவில் 2,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘முரசு’ புயலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி, ஆந்திரப் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதே பகுதியில் கிட்டத்தட்ட 30,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவைத் தாக்கிய ஓர்னாப் புயலின் தாக்கத்தால் ஆறு பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



