இலங்கை செய்தி

மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம்: பின்னணி என்ன?

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதியை நிலைநாட்ட தற்போதைய அரசும் பொலிஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று (02) மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதியை நிலைநாட்ட தற்போதைய அரசும் பொலிஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று (02) மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் நடைபெற்ற வேளையில், மாவட்ட செயலகத்தைச் சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், செ.கஜேந்திரன், அலிஸாஹிர் மௌலானா ,

பொதுமக்கள் மற்றும் வடக்கு மாகாணத்திலிருந்து வருகை தந்திருந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டு பண்ணையாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“மக்களின் கோரிக்கைக்குத் தீர்வு தர வேண்டும்”, “பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “அபிவிருத்திக் குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து”, “மேய்ச்சல் தரை நிலம் எமக்கு வேண்டும்”, “சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை வெளியேற்று”, “மகாவலியே வெளியேறு” போன்ற கோஷங்களை எழுப்பி, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களால் பண்ணையாளர்களுக்கும் அவர்களின் பசுக்களுக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின்போது பண்ணையாளர்கள் 7 பேரை மாத்திரம் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் அழைத்து உரையாடினார். எனினும், அரச அதிபருடன் நடைபெற்ற கலந்துரையாடல் தமக்குத் திருப்தியளிக்கவில்லை என்று அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு திரும்பிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது இவ்வாறு இருக்க, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி கோரிய போராட்டத்தை முன்னின்று நடத்திய 11 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகச் செயற்பாட்டு ஒன்றியத்தின் இணைப்பாளர் அருட்பணி லுக்ரோன் அடிகளார் தெரிவித்தார்.

தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத், சிவில் சமூகச் செயற்பாட்டு ஒன்றியத் தலைவர் சிவயோகநாதன், பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன், விவசாயிகள் சம்மேளனத் தலைவர் மோகன் ஆகியோருக்கு எதிராகவே நீதிமன்றத்தால் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்றத் தடை உத்தரவை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை