செய்தி விளையாட்டு

வாயால் வந்த வினை: Real Madrid போட்டிகளுக்கு சீனாவில் தடை

பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே, சீனாவின் முன்னாள் தலைவர் மாவோ சேதுங் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, ரியல் மட்ரிட் அணியின் போட்டிகளை ஒளிபரப்புவதை சீன அரச தொலைக்காட்சி தொடர்ந்து தவிர்த்து வருகிறது.

பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே, சீனாவின் முன்னாள் தலைவர் மாவோ சேதுங் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, ரியல் மட்ரிட் அணியின் போட்டிகளை ஒளிபரப்புவதை சீன அரச தொலைக்காட்சி தொடர்ந்து தவிர்த்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரியல் மட்ரிட் மற்றும் ரேசிங் சான்டாண்டர் அணிகளுக்கு இடையிலான ஸ்பானிய லா லிகா போட்டி, சீன அரச தொலைக்காட்சியின் (CCTV) இரண்டு விளையாட்டு அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படவில்லை.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் லா லிகா போட்டிகளின் ஒளிபரப்பை இடைநிறுத்துவதாக சீனாவின் அரச ஊடகக் குழுமமான China Media Group (CMG) அறிவித்திருந்தது.

இதற்குக் காரணம், ஏப்ரல் மாதம் இடம்பெற்ற காணொளி உரையாடலொன்றில் எம்பாப்பே, இணையத்தில் பரவியிருந்த தனது உருவம் மாவோ சேதுங்கின் உருவத்துடன் இணைக்கப்பட்ட கேலிச்சித்திரம் குறித்துப் பேசியிருந்தமையாகும். அப்போது அவர், மாவோவை மறைமுகமாகக் குறிப்பிட்டு, அவரை சீன சர்வாதிகாரி எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து சீனாவில் கடும் எதிர்ப்பு உருவானது.

இதனையடுத்து, எம்பாப்பே தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரியதுடன், அது தவறான முறையில் வெளிப்பட்டதாகவும், சீன மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதைப் புரிந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரியல் மட்ரிட் கழகமும் லா லிகா நிர்வாகமும் இச்சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியுள்ளன. எம்பாப்பேயின் மன்னிப்பைத் தமது அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த மன்னிப்புகளைத் தொடர்ந்து லா லிகா போட்டிகளின் ஒளிபரப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என்பது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.

சீன அரச தொலைக்காட்சியில் போட்டிகள் ஒளிபரப்பப்படாவிட்டாலும், அரசுக்குச் சொந்தமான China Mobile நிறுவனத்தின் டிஜிட்டல் ஒளிபரப்புச் சேவையான Migu ஊடாக சில லா லிகா போட்டிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. எனினும், ரியல் மட்ரிட் – ரேசிங் சான்டாண்டர் போட்டி அந்தச் சேவையிலும் ஒளிபரப்பப்பட்டதாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், எம்பாப்பேயின் கருத்தைத் தொடர்ந்து சீனாவின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் அவருடனான விளம்பர ஒப்பந்தங்களை இரத்துச் செய்துள்ளன.

சீனா, ஐரோப்பிய கால்பந்துக் கழகங்களுக்கு மிக முக்கியமான வர்த்தகச் சந்தையாக விளங்குவதால், இந்தச் சர்ச்சை ஸ்பானிய கால்பந்துத் துறையின் வர்த்தக நலன்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

மாவோ சேதுங் 1976ஆம் ஆண்டு உயிரிழந்தார். சீனாவின் நவீன வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ள அவரது ஆட்சிக்காலம் தொடர்பான விமர்சனங்களும் கேலிகளும் அந்நாட்டில் மிகுந்த உணர்வுபூர்வமான விடயங்களாகக் கருதப்படுகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி