மேயர் பதவி நீக்கம் – வவுனியாவில் போராட்டம்
வவுனியா மாநகர சபை மேயர் பதவியிலிருந்து சு.காண்டீபன் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வடக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும் வவுனியாவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வவுனியா – பண்டாரவன்னியன் […]













