மனித உரிமை விவகாரம் குறித்து ஐ.நா. பிரதானியுடன் பிரதி அமைச்சர் பேச்சு!
பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச கட்டமைப்பிற்குள் ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்பட இலங்கை தயாராக இருக்கின்றது என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா Arun Hemachandra தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே பிரான்சுடன் Marc-André France நடைபெற்ற சந்திப்பின்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக பின்வரும் […]













