ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் கரப்பான் பூச்சிகள் பறிமுதல்!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு வணிக இனப்பெருக்க மையத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிட்னியில் இருந்து மேற்கே 200 கி.மீ தொலைவில் உள்ள Bathurst என்ற இடத்திலேயே குறித்த நிலையம் அமைந்துள்ளது. மடகாஸ்கர் ஹிஸ்ஸிங் Madagascar hissing மற்றும் துபியா Dubia போன்ற சட்டவிரோத இனங்களைச் சேர்ந்த இவை, இரண்டு லட்சம் டாலர்கள் ஆஸ்திரேலிய பெறுமதி கொண்டவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு இனங்களையும் ஆஸ்திரேலியாவிற்குள் சட்டப்பூர்வமாக […]













