உலகம்

கினியாவில் பொது மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் -10 பேர் பலி

  • November 13, 2026
  • 0 Comments

கினியாவின் வடகிழக்குப் பகுதியில், தங்கம் வெட்டி எடுக்கப்படும் இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிராந்திய நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கினியாவின் சிகுரி (Siguiri) பகுதியில், கைமுறை முறையில் தங்கம் வெட்டி எடுக்கும் நடவடிக்கைக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்று பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில்  அரசின் உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]