செய்தி விளையாட்டு

கொல்கத்தா அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!

  • May 20, 2026
  • 0 Comments

IPL 2026 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 65 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் கொல்கத்தா அணியின் play off வாய்ப்பு சற்று அதிகரிக்கும். அதேவேளை, ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் கொல்கத்தாவின் playoff வாய்ப்பு சரிந்து பிற அணிகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

செய்தி விளையாட்டு

சூரியவன்ஷி அதிரடி: ராஜஸ்தான் வெற்றி!

  • May 20, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி […]

இலங்கை ஐரோப்பா செய்தி

“அரசியலையும், அபிவிருத்தியையும் பிரிக்க முடியாது” – பிரிட்டனில் பிரதமர் உரை!

  • May 20, 2026
  • 0 Comments

“அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும், தெரிவுகளையும் அரசியலே வடிவமைக்கின்றது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், பிரைட்டன் நகரில் அமைந்துள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி ஆய்வுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, […]

அரசியல் இலங்கை செய்தி

இன அழிப்பு குறித்து விஜய்க்கு ஏன் கடிதம் எழுத வேண்டும்: மஹிந்த அணி கொதிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

“புலிகள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த 2 லட்சத்து 90 தமிழ் மக்களை எமது ராணுவமே மீட்டது. இன அழிப்பை நாமே தடுத்தோம். எனவே, இன அழிப்பு தொடர்பில் எந்த அடிப்படையில் தமிழக முதல்வருக்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் எழுத முடியும்” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். “ மே 18 ஆம் திகதியை […]

உலகம் செய்தி

போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வு: மஹிந்தவுக்கு கதவடைப்பு?

  • May 20, 2026
  • 0 Comments

கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்விற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், “ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் […]

ஆஸ்திரேலியா செய்தி

சிட்னியை கிலிகொள்ள வைத்த துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி: நால்வர் படுகாயம்!

  • May 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னி தெற்மேற்குப் பகுதியில் வீடொன்றுமீது பாதாளக்குழு நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். சிட்னியைச் சேர்ந்த பிரபல Rap இசைக் குழுவான OneFour இன் முன்னாள் உறுப்பினரான அலை அஹியோ Alai Ahio , Canley Heights பகுதியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களுடன் இருந்தவேளையிலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.20 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக பொலிஸாருக்கு அவசர அழைப்புகள் வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, இரவு […]

இலங்கை செய்தி

அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் இலங்கையில் முக்கிய பேச்சு!

  • May 20, 2026
  • 0 Comments

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் (Defense Security Cooperation University) பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (Institute for Security Governance – ISG) பிரதிநிதிகள் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவினர் நேற்று பாதுகாப்பு செயலாளர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை, பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த கலந்துரையாடலின் போது, பாதுகாப்புத் துறைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் பயிற்சி திட்டங்கள் குறித்து கவனம் […]

இலங்கை செய்தி

” மீண்டுமொரு பிரபாகரன் உருவாகினால் NPP அரசே பொறுப்பு கூறவேண்டும்”

  • May 20, 2026
  • 0 Comments

“புலிகளை நினைவுருவதற்கு இடமளிப்பதானது பாரதூரமான பிரச்சினையாகும். இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகினால் அதற்குரிய முழு பொறுப்பையும் என்.பி.பி. அரசாங்கம் ஏற்க வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு விமல் வீரவன்சவுக்கு […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆசைகாட்டி கோடிகளை சுருட்டிய ஆசாமி கைது!

  • May 19, 2026
  • 0 Comments

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகச் சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்தி, பல கோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரை குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர், கிண்ணியா பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும், தற்போது குச்சவெளி பிரதேசத்தில் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருபவர் என்றும், நீண்ட காலமாக கொழும்பில் தங்கியிருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட வேண்டும்: G-7 மாநாட்டில் வலியுறுத்து

  • May 19, 2026
  • 0 Comments

உலகப் பொருளாதாரத்தில் நிலவும் அபாயங்களைக் களைவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு G– 7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் உறுதிபூண்டுள்ளனர். அதேபோல சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம் எனவும் அவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதையும் G- 7 நிதி அமைச்சர்கள் எடுத்துரைத்துள்ளனர். பாரிஸில் நடைபெற்ற இம்மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் […]

error: Content is protected !!