உலகம் செய்தி

பேச்சுகளை தொடருமாறு ஈரான் கோரிக்கை: ட்ரம்ப் தகவல்

மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனி தெஹ்ரானுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள தான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப புதன்கிழமை (ஜூலை 08) தெரிவித்துள்ளார்.

ஈரான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக 60 நாட்கள் போரை நிறுத்த இரு தரப்புகளும் இணங்கியிருந்தன.

இந்நிலையிலேயே, அமெரிக்கா கடந்த 7ஆம்திகதி ஈரான் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இவ்வாறானதொரு பின்னணியில்தான், அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் கோரிக்கை விடுத்ததாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி