அதிகாரப் பகிர்வு அவசியம்: ஜனாதிபதி முன்னிலையில் சுமந்திரன் வலியுறுத்து!
”நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத்தைத் திறக்கும் நிகழ்வில் இன்று உரையாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]












