உலகம் செய்தி

அமெரிக்க ராணுவ இலக்குகள்மீது தாக்குதல் தொடரும்: ஈரான் அறிவிப்பு

குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானின் அதிகாரப்பூர்வ ‘இர்னா’ (IRNA) செய்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைகளின் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை அமைப்புகள், பதுங்கு குழிகள் மற்றும் ஆதரவு தங்குமிடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து, இராணுவம் “அழிவுகரமான ட்ரோன்” தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள இராணுவ தளங்கள், சிவிலியன் உட்கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள ஈரானிய இராணுவம், இத்தகைய நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் (UN Charter) அடிப்படை நெறிமுறைகளை வெளிப்படையாக மீறும் செயல் என்று சாடியுள்ளது.

மேலும், இனிவரும் காலங்களில் ஏற்படும் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக, நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சுதந்திரம் மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ஈரானிய ஆயுதப் படைகள் தங்களின் முழுத் திறனையும் பயன்படுத்தும் என்றும் இராணுவம் எச்சரித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி