அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு துணை நிற்கும் சீனா!

  • December 17, 2025
  • 0 Comments

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களின்போது இலங்கையுடன் நெருக்கமாகச் செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிரந்தரக் குழுவின் உப தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். கொழும்பு வந்துள்ள வாங் டோங்மிங்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (17) நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு, மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் […]

இலங்கை செய்தி

ரயில் கட்டமைப்பை மீளமைக்க சீனாவிடம் தொழில்நுட்ப உதவி கோருகிறார் அநுர!

  • December 17, 2025
  • 0 Comments

பேரிடரால் சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு சீனாவிடம், இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்படி கோரிக்கையை விடுத்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி […]

அரசியல் இலங்கை செய்தி

பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவு: அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீனத் தூதுக்குழுவின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று பேச்சு நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. “டித்வா சூறாவளியால் ஏற்பட்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவுக்கு இணையாக சீனாவும் களத்தில்: பீஜிங் உயர்மட்ட தலைவர் 23 ஆம் திகதி கொழும்பு விஜயம்!

  • December 14, 2025
  • 0 Comments

சீனாவின் உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவர் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி அவரது விஜயம் இடம்பெறும் என்று ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் மூன்றாவது அதிஉயர் அதிகாரம் படைத்தவரான, சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழு தலைவரான சோ லெஜி என்பவரே இரு நாள் விஜயமாக இலங்கை வருகின்றார். பேரிடருக்குப் பின்னர், இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவும், அமெரிக்காவும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையிலேயே தமது உதவி […]

ஆஸ்திரேலியா செய்தி

பசுபிக் பிராந்திய பாதுகாப்பு: ஆஸ்திரேலியா புது வியூகம்!

  • December 13, 2025
  • 0 Comments

பசுபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடலுக்கடியில் மூன்று கேபிள் இணைப்புத் திட்டங்களை கூகுள் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது. பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் இதற்குரிய நிதி உதவியை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது. மேற்படி கேபிள் திட்டமானது பப்புவா நியூ கினியாவின் டிஜிட்டல் துறையில் புரட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பப்புவா நியூ கினியா உட்பட பசுபிக் பிராந்தியத்தில் தனத செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு சீனா தீவிர் காட்டிவருகின்றது. பப்புவா நியூ […]

இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சீனாவின் உதவியும் தொடர்கிறது!

  • December 13, 2025
  • 0 Comments

பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள், பாலங்கள், தொடருந்து உள்ளிட்ட, உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனா உதவும் என நம்பப்படுகின்றது. வெளிநாட்டு நாடுகளுடனான சீன மக்கள்நட்புறவு சங்கத்தின் தலைவர் யாங் வான்மிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை கொழும்பில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியது. இதன்போது, பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் தொடர்ந்து ஆதரவளிப்பதாக யாங் வான்மிங் உறுதியளித்தார். இலங்கை உடனான சீனாவின் நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட […]

இலங்கை

இந்தியா, சீனா தலைமையில் இலங்கைக்காக சர்வதேச மாநாடு!

  • December 8, 2025
  • 0 Comments

இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் இணைத்தலைமையின் கீழ் இலங்கைக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில பரிந்துரைத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ டிட்வா சூறாவளியால் இலங்கைக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 8 பில்லியன் டொருக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இழப்பை இலங்கையால் தனித்து ஈடுசெய்ய முடியாது. எனவே, இந்தியா, […]

உலகம் செய்தி

05 வருடங்களுக்கு பிறகு மீளவும் சீனாவிற்கான விமானசேவைகளை ஆரம்பித்த இந்தியா!

  • October 26, 2025
  • 0 Comments

இந்தியாவும், சீனாவும் இன்று முதல் நேரடி விமான சேவைகளை மீளவும் ஆரம்பித்துள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு இமாலயா பகுதியில் இடம்பெற்ற இராணுவ மோதல்களை தொடர்ந்து ஐந்து வருட காலமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது விமான சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன. விமானங்களை மீண்டும் தொடங்குவது “மக்களுக்கு இடையேயான தொடர்பை” அதிகரிக்கும் மற்றும் “இருதரப்பு பரிமாற்றங்களை படிப்படியாக இயல்பாக்குவதற்கு” உதவும் என்று இந்திய அரசாங்கம் கூறியது. இந்தியாவின் மிகப்பெரிய வணிக விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) […]

உலகம்

சீனப் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – ஆயுட்காலம் உயர்வு

  • October 14, 2025
  • 0 Comments

சீனாவில் வாழும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகள், இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இது தொடர்பில் வெளியான தரவுகளுக்கமைய, 2000ஆம் ஆண்டு ஒரு சீனப் பெண்ணின் சராசரி ஆயுட்காலம் 73.3 ஆண்டுகள் ஆக இருந்தது. அது தற்போது 80.9 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 25 ஆண்டுகளில் 7.6 ஆண்டுகள் அல்லது 10.4 சதவீதம் என்ற அளவில் ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. […]

உலகம்

தைவானின் நிலைமையை அளவிட சீனா பயன்படுத்தும் புதிய உத்தி

  • October 11, 2025
  • 0 Comments

தாய்வானின் கடல் எல்லையில் போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை சீனக் கப்பல்கள் ஒளிபரப்பி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. போராய்வு நிறுவனமொன்றின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வகையான அறிவாற்றல் ஆக்கிரமிப்புகளுக்கு தாய்வானின் பதிலை மதிப்பீடு செய்யும் முயற்சியாக, சீனா இந்த போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னதாக, பல சீன மீன்பிடிக் கப்பல்கள் தாய்வானின் கடல் எல்லையில் போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. […]