சீனாவில் உணவகம் ஒன்றில் கத்தி குத்து தாக்குதல் – ஜப்பானிய பிரஜைகள் இருவர் காயம்!
சீனா – ஷாங்காயில் (Shanghai) உள்ள உணவகம் ஒன்றில் நேற்று கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு ஜப்பானிய ஆண்களும் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
தாக்குதல்தாரி 59 வயதுடையவர் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா (Minoru Kihara) சம்பவம் குறித்து சீன அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




