இலங்கை

திருகோணமலை- ஸ்ரீபுர பொலிஸ் நிலையம் உத்தியோகப்பூர்வமாக திறப்பு

திருகோணமலை- ஸ்ரீபுர பொலிஸ் நிலையத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.எம்.யூ.மஹிந்த திஸாநாயக்கவினால் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

யுத்த காலத்தின் போது மக்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீபுர கூட்டுறவு கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த குறித்த பொலிஸ் நிலையம் ஏழரை இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

30 இலட்சம் ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்ட நிலையில் 10 மாதத்திற்குள் ஸ்ரீபுர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த ஜே. எம் ஏ. டி பண்டார ஜெயதிலக்க தனது எல்லைக்குட்பட்ட ஒன்பது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் காணப்பட்ட வளங்களை பயன்படுத்தி சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உதவியுடன் குறித்து கட்டிடத்தினை ஏழரை இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடித்துள்ளார்.

இதேவேளை போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதிலும், போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வு அளிப்பதிலும் சிறந்து சேவையாற்றிய குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நிக்கவரட்டிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்