சீமெந்தின் விலை அதிகரிப்பு
சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 50 கிலோகிராம் சீமெந்து மூட்டை ஒன்றின் விலையை 100 ரூபாயால் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது 2,100 முதல் 2,250 வரை விலையிடப்பட்டிருந்த 50 கிலோகிராம் சீமெந்து மூட்டையொன்றின் விலை, 2,200 முதல் 2,350 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சீமெந்து உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாகே விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.



