வடக்கில் முதலீடு செய்யுமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்காக இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.வேதநாயகன் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே வடக்கு மாகாண ஆளுநரை இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளியும் இச்சந்திப்பில் பங்கேற்றார். இச்சந்திப்பின்போது, […]













