மீண்டும் அமைதி பேச்சு! பாகிஸ்தான் கூறுவது என்ன?
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சு மீண்டும் நடைபெறக்கூடும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் Khawaja Asif நம்பிக்கை வெளியிட்டார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சு நடைபெற்றது.
இது தோல்வியடைந்தையடுத்து ஈரான் துறைமுகங்கள்மீதான முற்றுகை எச்சரிக்கையை ட்ரம்ப் வெளியிட்டார். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாகிஸ்தான் தரப்பில் இருந்து மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“ பேச்சுவார்த்தையில் நேர்மறையான முன்னேற்றம் காண்கிறோம். தற்போது இந்த முயற்சி சரியான திசையை நோக்கியுள்ளதாக கருதுகிறோம்.
விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை எதிர்நோக்குகிறோம். மேலும், இது எல்லாம் இறைவனிடம் இருக்கிறது” என தெரிவித்தார்.
அமெரிக்கா முன்வைத்த சில நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை என்பதால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைய அமெரிக்கா தான் காரணம் என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.





