இந்தியா உலகம் செய்தி

ட்ரம்ப், மோடி 40 நிமிடங்கள் மந்திராலோசனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் நேற்று தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சுமார் 40 நிமிடங்கள்வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, மேற்காசிய போர் குறித்தும், ஹார்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பிலும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளுடனும் இந்தியாவுக்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.

மேற்படி நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடி தொடர்பில் உள்ளார்.

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு ரஷ்யா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்திய பிரதமருடன் ஜனாதிபதி ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!