உலகம் செய்தி

‘துறைமுக முற்றுகை’ ஈரானின் இறையாண்மையை மீறும் செயல்!

ஈரான் துறைமுகங்கள்மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கையானது இறையாண்மை மீறும் செயல் என ஐ.நாவுக்கான ஈரான் தூதுவர் Amir saeid iravani சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடுவதற்குரிய ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

இந்த நடவடிக்கையை ஐ.நாவுக்கான ஈரானியத் தூதுவர் கடுமையாக எதிர்த்துள்ளதுடன், இது சர்வதேசக் கடல்சார் சட்டங்களை மீறும் செயல் எனவும் ஐ.நா. சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, இந்த முற்றுகை ஏனைய நாடுகளின் கப்பல்களையும் பாதிக்கும் என்பதால், கடற்பயண சுதந்திரத்தை அனைத்து தரப்புகளும் மதிக்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், ஈரானியப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் மட்டுமே தடுக்கப்படும் என்றும், ஹார்முஸ் நீரிணை வழியாக பிற இடங்களுக்குச் செல்லும் போக்குவரத்தில் தலையிடப் போவதில்லை என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி