உலகம் செய்தி

மேற்காசிய போரால் பிரிட்டன் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு!

மேற்காசிய போரால் பிரித்தானியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் International Monetary Fund (IMF) எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் சூழ்நிலையால் ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வானது ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளைவிட பிரித்தானியாவிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வளர்ச்சி எதிர்பார்ப்பு கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், இந்த போர் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

குறிப்பாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகரிக்கும்போது மத்திய வங்கிகள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியுள்ளது.

நீண்டகால போர் உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி