மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு அபராதம் விதிப்பு
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னருக்கு (David Warner) மதுபோதையில் வாகனம் செலுத்திய (Mid-range drink driving) குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்டிருப்பதுடன், 1,500 ஆஸ்திரேலிய டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 39 வயதான டேவிட் வார்னர், இந்த ஆண்டின் ஈஸ்டர் வாரயிறுதி விடுமுறையின் போது சிட்னியின் மாரூப்ரா (Maroubra) பகுதியில் காவல்துறையின் திடீர் மூச்சுப் பரிசோதனைச் சாவடிக்கு அருகே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்டப் பரிசோதனையில் மது அருந்தியிருப்பது உறுதிசெய்யப்பட்டதுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட […]













