கல்முனையில் சோகம் – பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய நபர் பலி
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மருதமுனைக்கு அண்மையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பேருந்தின் அடியில் சிக்கிய நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்தில் கல்முனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்களில் பயணித்த நபர் பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் 36 வயதுடைய தியாகராஜா ஜெயகிருஸ்ணன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்




