திருகோணமலையில் யானை தந்தங்களை வைத்திருந்தவர் கைது
திருகோணமலை நிலாவெளி வள்ளுவர் வீதியில் வீடு ஒன்றில் யானை தந்தங்களை வைத்திருந்த நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர்.
திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது யானை தந்தம் மீட்கப்பட்டுள்ளது.
விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி எம்.எம்.என்.டி. திலகரத்ன மற்றும் எச்.எம்.டி. மாலித் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குறித்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யானை தந்தத்துடன் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.




