எல்லை பிரச்சினையை தீர்ப்பதில் இணைந்து செயல்பட சீனா, இந்தியா இணக்கம்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இருநாட்டு எல்லை பிரச்சினைகளை தீர்ப்பதில் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 11 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீன ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளது. “எல்லை தொடர்பான பிரச்சினைகளில் இரு தரப்பினரும் தற்போதுள்ள ஒப்பந்தங்களையும் புரிந்துணர்வுகளையும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை” மோடி வலியுறுத்தினார் என்றும் […]



