சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை என்பது பொதுவானதாகி விட்டது. முன்பு வயதானவர்களை குறி வைத்த இந்த நோய், தற்போது, இளைஞர்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது கவலைக்குறிய விஷயம்.
சிறுநீரகங்கள் உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. உடலில் நிறைந்திருக்கும் கழிவுகள் வெளியேறும் பணியை மட்டுமல்லாது, இரத்தத்தை வடிகட்டுதல் போன்ற முக்கியமான செயல்பாடுகளை செய்கிறது. எனவே, சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். எனவே, சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால், அதைக் கண்டறிந்து, விரைவில் சிகிச்சையைத் தொடங்குவது அவசியம்.
சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் போனால், உடலில் அதிகப்படியான கழிவுகள் சேர்ந்து, பல நோய்களின் ஆபத்து (Health Tips) அதிகரிக்கிறது. எனவே, சிறுநீரக பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது. இதனை கவனிக்காமல் விட்டால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது. சிறுநீரக பாதிப்பின் சில பொதுவான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வதால், பல விதமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அளவிற்கு அதிக சோர்வு மற்றும் பலவீனம்
காலையில் எழுந்தவுடன் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தால், அது சிறுநீரக பாதிப்பின் தீவிர அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சனைகள் காரணமாக, உடலில் நச்சுகள் அதிகமாவதன் காரணமாக காலையில் எழுந்தவுடன் சோர்வாக உணரலாம். அதே போன்று, நன்றாக சாப்பிட்ட பின்னும் சோர்வாக உணரலாம். இந்த அறிகுறியை லட்சியம் செய்யதீர்கள்.
சிறுநீரின் நிறத்தில் மாற்றங்கள்
சிறுநீரின் நிறம் மற்றும் அளவில் அசாதாரண நிலை இருந்தால், அது சிறுநீரக சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். உங்கள் சிறுநீர் மிகவும் மஞ்சளாக இருந்தாலோ, சிறுநீரில் நுரை உருவாகி, குமிழ்கள் தெரிந்தாலோ அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலோ, அது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
தசைகளில் வலி
சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத நிலையில், உடலில் எலக்ட்ரோலைட் அளவுகள் சீராக இருக்காது. இதனால் ஏற்படும், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் குறைபாடு காரணமாக தசைகளில் வலி ஏற்படும்.
வயிற்றுப் பிடிப்புகள்
காலையில் எழுந்தவுடன் வயிற்றில் வீக்கம் அல்லது பிடிப்புகள் ஏற்பட்டால், அது சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
கால்களில் வீக்கம்
பாதங்கள் மற்றும் குதிகால் சுற்றி வீக்கம் இருப்பது, சிறுநீரக பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரகத்தில் போதுமான அளவு சோடியம் இல்லாத நிலையில், அவை சரியாக வேலை செய்யாது. எனவே, அதிகப்படியான திரவம் உடலில் சேர்ந்து, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது.
அளவிற்கு அதிக தாகம்
நீங்கள் காலையில் எழுந்தவுடன் அடிக்கடி தாகமாக உணர்ந்தால், இது மற்றொரு அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினைகள் காரணமாக, உடலில் நீர் சத்து குறையும். இதன் காரணமாக உங்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்படலாம்.
சருமத்தில் ஏற்படும் அரிப்பு
சிறுநீரக பிரச்சனைகள் காரணமாக, நச்சுகள் உடலில் சேரத் தொடங்குகின்றனஇதனால், சருமத்தில்ல் அரிப்பு, தடிப்புகள் அல்லது பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தோலில் அசாதாரண அரிப்பு ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தவே வேண்டாம்.