தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் – 7000 ரூபாவால் வீழ்ச்சி
உலக சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதன்படி தற்போது அவுன்ஸ் ஒன்றின் விலை 3,526 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதற்கமைய இலங்கையிலும் தங்கத்தின் விலை 7000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி 24 காரட் பவுண் ஒன்றின் விலை 345,000 ரூபாவாகவும், 22 காரட் தங்கத்தின் விலை 317,400 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
மேலும் ஆபரண தங்கத்தின் விலை இவற்றில் இருந்து சற்று மாறுப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




