13 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: முதல் நாளிலேயே 2.36 பில்லியன் டொலர் குவித்த GTA 6
13 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்னர் வெளியான Grand Theft Auto 6 (GTA 6), முதல் நாளிலேயே 24.5 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, சுமார் 2.36 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான Sensor Tower மதிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் வரலாற்றில் மிகப்பெரிய பொழுதுபோக்கு வெளியீடாக GTA 6 உருவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Rockstar நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு, அமெரிக்காவின் புளோரிடாவை அடிப்படையாகக் கொண்ட கற்பனை மாநிலமான லியோனிடாவில் இடம்பெறும் குற்றச் செயல்களை மையமாகக் கொண்டுள்ளது. இதில் லூசியா மற்றும் ஜேசன் ஆகிய இரு புதிய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விளையாட்டை உருவாக்குவதற்கு 1 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு உலகளாவிய விற்பனை மூலம் 3 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டின் 212GB கோப்பைப் பதிவிறக்கம் செய்வதற்காக வீரர்கள் ஒரே நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்தியதால், Virgin Media O2 நிறுவனத்தின் இணையப் பயன்பாட்டு சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது.




