ஐரோப்பா

பிரான்ஸில் தடை செய்யப்படவுள்ள பொருள்!

பிரான்ஸில் கஞ்சா போதைப்பொருளுக்கு தடை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

மருத்துவத் தேவைக்காக பயன்படுத்தப்படும் கஞ்சா போதைப்பொருளுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

hexahydrocannabinol அல்லது HHC என அழைக்கப்படும் இந்த கஞ்சா பயன்பாடு பிரான்சில் அண்மையில் அனுமதிக்கப்பட்டது.

மிகச் சிறிய அளவிலான பதப்படுத்தப்பட்ட கஞ்சா மூலிகை மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வரும் வாரங்களில் அவற்றுக்கு தடை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சர் François Braun தெரிவிக்கையில், அடுத்த சில வாரங்களில் இந்த தடை கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

இணையத்தளமூடாக தவறான நோக்கத்துடன் இவை விற்பனை செய்யப்படுவதாகவும், எதிர்பார்த்த அளவை விட மிக அதிகமான விற்பனையைச் சந்தித்துள்ளது எனவும், இதனை மீள ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content