ஐரோப்பா

ரஷ்யாவை எதிர்த்து நிற்க வலுவான நடவடிக்கை தேவை – டென்மார்க் வலியுறுத்தல்

ரஷ்ய உளவுத்துறையால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் படுகொலை முயற்சி ஒன்றை முறியடித்துள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவை எதிர்த்து நிற்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நாடானது தனது சக ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் குறிப்பில் 29 நாடுகளைக் கொண்ட ஷெங்கன் சுதந்திரப் பயண மண்டலத்திற்குள் ரஷ்ய நாட்டினர் நுழைவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்ய குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை நிறுத்துவதையும், அந்த மண்டலம் முழுவதும் ரஷ்யாவின் பயோமெட்ரிக் அல்லாத கடவுச்சீட்டுகளை அங்கீகரிப்பதை நிறுத்துவதையும் பரிந்துரைத்துள்ளது.

இந்த முன்மொழிவுகள்  பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியத் தூதர்களின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  அமெரிக்க-உக்ரேனிய ராப் பாடகர் ஒருவரைக் கொல்ல ரஷ்ய உளவுத்துறை மேற்கொண்ட முயற்சியைத் தடுத்ததாக டென்மார்க் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஷ்யாவின் பாதுகாப்புத் தூதரை வெளியேற்றுவதாக டென்மார்க் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்