ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

40 பில்லியன் யூரோ நிதி வெட்டு; டிஜிட்டல் நிறுவனங்களுக்கு EU புதிய வரி

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2028–2034 காலப்பகுதிக்கான நீண்டகால வரவு செலவுத் திட்டத்தில் மேலும் 40 பில்லியன் யூரோவை குறைக்கவும், டிஜிட்டல் நிறுவனங்கள் மீது புதிய வரி விதிக்கவும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா முன்மொழிந்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2028–2034 காலப்பகுதிக்கான நீண்டகால வரவு செலவுத் திட்டத்தில் மேலும் 40 பில்லியன் யூரோவை குறைக்கவும், டிஜிட்டல் நிறுவனங்கள் மீது புதிய வரி விதிக்கவும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா Antonio Costa முன்மொழிந்துள்ளார்.

இது தொடர்பான புதிய வரவு செலவுத் திட்ட வரைவு இன்று (21) முன்வைக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த முன்மொழிவின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழு ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டம் 1.582 டிரில்லியன் யூரோவாக குறைக்கப்படவுள்ளது.

அக்டோபரில் முன்வைக்கப்பட்ட சமரசத் திட்டத்தை விட 40 பில்லியன் யூரோ குறைக்கப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஆரம்ப முன்மொழிவை விட 180.6 பில்லியன் யூரோ குறைவாகும்.

இந்த வெட்டுக்கள் முக்கியமாக ஐரோப்பிய போட்டித்திறன் நிதியம், பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு செலவீனங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேவேளை, விவசாயம் மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் ஒப்பீட்டளவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

புதிய வரவு செலவுத் திட்டத்துக்கு வருவாய் திரட்டும் நோக்கில், டிஜிட்டல் நிறுவனங்களின் இணையவழி விளம்பர வருவாய், டிஜிட்டல் இடைத்தரகர் சேவைகள் மற்றும் பயனர்களின் தரவுகளைப் பணமாக்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 3 சதவீத வரி விதிக்கவும் கோஸ்டா முன்மொழிந்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் டிஜிட்டல் நடவடிக்கைகள் மூலம் ஆண்டுக்கு 50 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டுவதுடன், உலகளாவிய வருவாய் 750 மில்லியன் யூரோவுக்கும் அதிகமாகக் கொண்ட நிறுவனங்கள் இந்த வரி விதிப்புக்கு உட்படுத்தப்படலாம்.

இந்த முன்மொழிவு அமெரிக்காவின் கூகுள், மைக்ரோசொப்ட், மெட்டா, ஆப்பிள் மற்றும் அமேசான் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பாதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் விசேட மாநாட்டில் கலந்துரையாடவுள்ளனர். 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் வரவு செலவுத் திட்டம் தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், விவசாயிகளுக்கான ஆதரவு நிதி போதுமான அளவில் பாதுகாக்கப்படவில்லை என பிரான்ஸ் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட பேச்சுவார்த்தையாளரும் இந்த முன்மொழிவை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி