ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவு திட்டம் ஏமாற்றமளிக்கிறது – பிரான்ஸ் ஆதங்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த நீண்ட கால வரவுசெலவுத் திட்டத்திற்கான சமீபத்திய பேச்சுவார்த்தை முன்மொழிவு “மிகுந்த ஏமாற்றமளிக்கிறது” என்று பிரான்ஸ் ஆதங்கம் வெளியிட்டுள்ளது.
பிரெஞ்சு தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இது தேவையானதை விட மிகவும் குறைவாக உள்ளது என்றும் விவசாயக் கொள்கை வருமான ஆதரவை உறுதி செய்வதில் பின்தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தற்போதைய நிலையில், ஐரோப்பிய கவுன்சில் தலைவரின் இந்த முன்மொழிவு ஒரு உடன்படிக்கைக்கான அடிப்படையை வழங்கவில்லை.” எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய மன்றத் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, 2028-2034 காலகட்டத்திற்கான அடுத்த நீண்டகால வரவுசெலவுத் திட்டத்திற்கான ஒரு புதிய முன்மொழிவை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ள நிலையில் பிரான்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.




