இலங்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைந்துக்கொள்ள நடவடிக்கை!

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,  இந்த ஆசிரியர்கள் மாகாணத்தின் பெயருக்கு ஏற்ப விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய முக்கிய பாடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மாகாணங்களினூடாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர்  குறிப்பிட்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்