ஐரோப்பா

போலந்தில் கல்லூரியொன்றில் கத்திகுத்து தாக்குதல் – மூவர் காயம்

போலந்து – வார்சாவில் உள்ள கல்லூரியில் நேற்று கத்திகுத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் மூவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இருவர் லேசான காயங்களுக்கு உள்ளானதாகவும் ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய 21 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் அதேகல்லூரியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் . தாக்குதல் நடத்தியவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே எந்தவிதமான அறிமுகமும் இல்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலந்தில் கடந்த ஒருவாரத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதல் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்