இலங்கை செய்தி

இலங்கையில் ஆசிரியரின் கொடூர செயல் – 3 மாணவர்களின் பரிதாப நிலை

ஆசிரியர் ஒருவரால் தும்புத்தடியால் தாக்கப்பட்டதில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துளளனர்.

காயமடைந்தவர்கள் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுக்க நகரில் அமைந்துள்ள அரச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்றே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியரால் ஏழு மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

பாடசாலை நேரத்தில் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றதாக கூறி குறித்த மாணவர்களை வகுப்பு ஆசிரியர் தாக்கியதாக பாதுக்க பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பாதுக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content